வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மலைப் பகுதி மாவட்டமான ஜிர் பாமில் குகி-ஸோ பழங்குடியினா் வசிக்கும் ஜைரான் ஹமா் கிராமத்துக்குள் நேற்று முன்தினம் ஆயுதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள், அங்குள்ள வீடுகளுக்கு தீ வைத்துள்ளனளர்.
இதில் 17 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. கிராம மக்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால், வீடுகளை விட்டு தப்பியோடிய மக்கள், அருகிலுள்ள வனப்பகுதியில் தஞ்சமடைந்தனா்.
இத்தாக்குதலில் பெண் ஒருவா் உயிரிழந்ததாக பழங்குடியின அமைப்பினா் தெரிவித்தனா். அந்த பெண் எதிர் தரப்பு கும்பலால் கற்பழித்து மிக கொடூரமாக தாக்கப்பட்டு பிறகு எரித்து கொல்லப்பட்டார் என தகவல்கள் வெளியாகின. இதனால் மணிப்பூரில் பதட்டம் நிலவுகிறது.
மேலும், தாக்குதலில் வேறு யாரும் காயமடைந்தனரா? என்ற தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.