நாட்டின் பிரதான அரசியல்கட்சிகளுக்கு ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சி தொடர்ந்தும் சவாலாகவே விளங்குவதாக கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்
களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார்
பொதுத்தேர்தலில் களமிறங்கியுள்ள ஐக்கிய ஜனநாயகக்கூட்டணியின் மற்றுமொரு வெற்றிப்பேரணி களுத்துறை மாவட்டத்தில் நேற்று இடம்பெற்றது
இதில் உரையாற்றிய ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சி தலைவர் ரஞ்சன் ராமநாயக்க , 5 வருடங்களுக்கு ஒரு தடவை நாட்டில் சிறந்த ஆட்சியாளர்களை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றது. மக்கள் பொறுத்தமானவர்களை நாடாளுமன்றுக்கு தெரிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
கடந்த 76 ஆண்டுகளாக மக்கள் அந்த சந்தர்ப்பத்தினை தவறான முறையிலேயே பயன்படுத்தினார்களான சரியாக பயன்படுத்தினார்களா என்று தெரியவில்லை. நாட்டின் எந்தவொரு மாவட்டத்தில் இருந்தும் எத்தகையை வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டாலும்.நாடு கடனையே எதிர்கொண்டது. இலங்கை சுதந்திரமடைமந்த காலப்பகுதியில் சுதந்தரமடைந்த ஏனைய நாடுகள் இன்று அனைத்து துறைகளிலும் அதீத வளர்ச்சி கண்டு அபிவிருத்தி அடைந்த நாடுகளாக மாறியுள்ளன. .
ஆனால் எமது நாடு கடனிலேயே தங்கியுள்ளது. அபிவிருத்திஅடைந்த நாட்டை உருவாக்குவதற்கு எவரும் முன்வரவில்லை. நாட்டில் பொறுப்புவாய்ந்த ஒரு எதிர்க்கட்சியை தெரிவு செய்வது மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. 14 ஆம் திகதி நாட்டு மக்கள் இந்த நாட்டில் மாற்றம் ஒன்றினை ஏற்படுத்த வேண்டும். நாட்டின் பிரதான அரசியல்கட்சிகளுக்கு ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சி தொடர்ந்தும் சவாலாகவே விளங்குகின்றது என குறிப்பிட்டார்.