நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.
குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
இதேவேளை நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் 40% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் மாலை வேளையில் சீரற்ற காலநிலை இருக்கும் என்பதால் காலை வேளையிலேயே மக்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கவும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.