• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான விசேட அறிவிப்பு!

10 ஆவது நாடாளுமன்றின் முதல் அமர்வு இன்று!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/11/21
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான ஒத்திகை நேற்று (20.11.2024) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இன்று காலை 9.55 மணிக்கு வாக்கழைப்பு மணி ஒலிக்கப்பட்டு 10.00 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்படவிருப்பதுடன், செங்கோல் சபா மண்டபத்தில் வைக்கப்பட்டதும், நாடாளுமன்றத்தைக் கூட்டும் ஜனாதிபதியின் பிரகடனத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபையில் வாசிப்பார்.

முதலாவதாக சபாநாயகரின் தெரிவு இடம்பெறவிருப்பதுடன், அரசியலமைப்பின் 64 (1) பிரிவு மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் 4,5 மற்றும் 6 இன் ஏற்பாடுகளுக்கு அமைய சபாநாயகர் வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்தல், சபாநாயகரின் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை, பிரதிச் சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் வாக்களிப்பினால் தெரிவுசெய்தல் என்பன இடம்பெறும்.

முதலாவது நாளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆசன ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாது என்பதால் தமக்கு விரும்பிய ஆசனங்களில் அமர முடியும் என்பது விசேடமானதாகும்.

இந்தச் செயற்பாடுகள் முடிவடைந்ததும் நாடாளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு அரசியலமைப்பின் 32(4) மற்றும் 33 சரத்துக்களுக்கு அமைய அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய மு.ப 11.30 மணிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அக்கிராசனத்தில் அமர்ந்து அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நாடாளுமன்றத்திற்கு முன்வைக்கவுள்ளார்.

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்ப நிகழ்வை எளிமையான முறையில் நடத்துமாறு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு அமைய ஜயமங்கள கீதம், முப்படையினரின் அணிவகுப்பு, மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனப் பவனி என்பன இடம்பெறாது என படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்தார்.

இதற்கு அமைய மு.ப 11.00 மணிக்கு சகல விருந்தினர்களும் தமது இருக்கைகளில் அமரவைக்கப்படவுள்ளனர். மு.ப 11.10 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத்தின் பிரதான நுழைவாயிலின் படிக்கட்டுக்கு அருகில் சபாநாயகர் வரவேற்கப்படவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மு.ப 11.15 மணிக்கு பிரதமர் வரவேற்கப்படவிருப்பதுடன், இதன் பின்னர் ஜனாதிபதியின் வருகை இடம்பெறும்.

அதன்படி மு.ப 11.20 மணியளவில் கௌரவ சபாநாயகர், நாடாளுமன்றச் செயலாளர்நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்டோர் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களைப் நாடாளுமன்ற கட்டடத்தின் பிரதான படிக்கட்டுகளுக்கு அருகில் வரவேற்கவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து படைக்கலசேவிதர், பிரதி படைக்கல சேவிதர் மற்றும் உதவி படைக்கல சேவிதர் ஆகியோர் முன்செல்ல கௌரவ சபாநாயகர், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி நாடாளுமன்ற கட்டடத்துக்குள் அழைத்துச் செல்லப்படுவார்.

இதன் பின்னர் உடையணி அறைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள ஜனாதிபதி அவர்கள் மு.ப 11.25 மணிவரை அங்கிருப்பதுடன், அதனைத் தொடர்ந்து பாராம்பரியத்துக்கு அமையப் பிரதிப் படைக்கல சேவிதர், செங்கோலைக் கையில் தாங்கியவாறு படைக்கல சேவிதர், ஜனாதிபதி, சபாநாயகர், செயலாளர் குழு மற்றும் உதவிப் படைக்கல சேவிதர் என்ற வரிசைப்படி அணிவகுத்து சபா மண்டபத்துக்குள் செல்வர். சபைக்குள் நுழையும்போது உதவி படைக்கல சேவிதர் ‘கௌரவ ஜனாதிபதி’ எனத் தெரிவித்ததும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து நிற்பது பாரம்பரியமாக இடம்பெறும்.

சபா மண்டபத்துக்கு அழைத்துவரப்படும் ஜனாதிபதி அங்கிராசனத்தில் அமர்ந்து சபைக்குத் தலைமை தாங்குவார்.

இதன்போது சபாநாயகர், நாடாளுமன்ற குழுநிலையின்போது அமரும் கீழ் பகுதியிலுள்ள ஆசனத்தில் செயலாளர் குழுவுடன் அமர்ந்திருப்பார். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரை நிகழ்த்தப்பட்டு, சபை ஒத்திவைக்கப்படும்.

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்ப நாள் நிகழ்வில் வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர்கள், பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர், அமைச்சுக்களின் செயலாளர்கள், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் கலந்துகொள்ளவிருப்பதாக படைக்கல சேவிதர் குஷான் பெர்னாந்து தெரிவித்தார். விருந்தினர்களுக்கான அழைப்பிதழ்கள் இலத்திரனியல் முறையில் (E-Invitations) அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related

Tags: Parliamentநாடாளுமன்றம்பாராளுமன்றம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

160 கிலோ ஐஸ், 60 கிலோ ஹெரோயினுடன் 10 பேர் கைது!

Next Post

இலஞ்ச ஊழல் வழக்கில் கௌதம் அதானி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!

Related Posts

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!
இலங்கை

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2026-05-08
வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!
இலங்கை

வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!

2026-05-08
107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!

2026-05-08
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 9 ஓட்டங்களால் வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஆசிரியர் தெரிவு

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 9 ஓட்டங்களால் வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

2026-05-08
ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியை கைது செய்ய உத்தரவு!
இலங்கை

கபில சந்திரசேன உயிரிழப்பு-தற்கொலையா?

2026-05-08
உக்ரேனுடனான ரஷ்யப் போரில் 2,300 வட கொரிய வீரர்கள் உயிரிழப்பு – பிபிசியின் புதிய ஆய்வு!
ஆசிரியர் தெரிவு

உக்ரேனுடனான ரஷ்யப் போரில் 2,300 வட கொரிய வீரர்கள் உயிரிழப்பு – பிபிசியின் புதிய ஆய்வு!

2026-05-08
Next Post
இலஞ்ச ஊழல் வழக்கில் கௌதம் அதானி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!

இலஞ்ச ஊழல் வழக்கில் கௌதம் அதானி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் கண் குறைபாடுகள்!

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் கண் குறைபாடுகள்!

தேய்பிறை சஷ்டி வேல் வழிபாடு!

தேய்பிறை சஷ்டி வேல் வழிபாடு!

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

0
இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

0
ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?

ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?

0
வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!

வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!

0
107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!

107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!

0
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2026-05-08
ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?

ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?

2026-05-08
வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!

வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!

2026-05-08
107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!

107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!

2026-05-08

Recent News

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2026-05-08
ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?

ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?

2026-05-08
வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!

வியட்நாம் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகப்பூர்வ வரவேற்பு!

2026-05-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.