முருகப்பெருமானுக்குரிய மாதமான கார்த்திகை மாதத்தில் முருகப்பெருமானுக்குரிய திதியான சஷ்டி திதி என்பது நவம்பர் மாதம் 21 ஆம் திகதி வியாழக்கிழமை (இன்று) வருகிறது.
அன்றைய நாளில் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்வது என்பது நமக்கு பலவிதமான நன்மைகளை ஏற்படுத்தித் தரும்.
தேய்பிறை சஷ்டியில் வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளும், கஷ்டங்களும், அவமானங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட நாளில் முருகனின் கையில் இருக்கக்கூடிய வேலை நினைத்து மந்திரம் கூறி வழிபாடு செய்ய வேண்டும்.
உலகத்திற்கு கெடுதல் அளித்த அசுரனை வதம் செய்த வேலை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட வேலை வழிபாடு செய்வதற்கு என்று பல வழிமுறைகள் இருந்தாலும் குறிப்பாக வேல்மாறல் படிப்பது என்பது அதீத பலனை தரும்.
வேல் மாறலை தினமும் பாராயணம் செய்வது என்பது அவ்வளவு எளிதான ஒரு விஷயம் கிடையாது.
அதற்கு பதிலாக அந்த வேல்மாறலுக்கு இணையான சக்தியை கொண்டதாக திகழ்வதுதான் கீழ் கண்ட மந்திரம்.
அந்த மந்திரத்தை தேய்பிறை சஷ்டியான நவம்பர் மாதம் 21 ஆம் திகதி ஆறு முறை கூறினாலே வேல் மாறல் படித்ததற்குரிய பலன் நமக்கு முழுமையாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் நமக்கு இதுவரை ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் தீரும் என்றும், அவமானங்கள் அசிங்கங்கள் அனைத்தும் நீங்கும் என்றும், நம்மை அலட்சியப்படுத்தி உதாசீனப்படுத்தியவர்கள் முன்பு நம்மால் தலைநிமிர்ந்து நடக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் எந்தவித பிரச்சினையும் வராமல் நம்மை பாதுகாக்கும் என்றும் கூறப்படுகிறது.
மந்திரம்
ஓம் ஜ்வால ஜ்வாலாய வித்மஹே
கோடி சூர்ய பிர்காசாய தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்