புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக அசோக ரன்வல நியமிக்கப்பட்டுள்ளார். பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமாகிய நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்போது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அசோக ரங்வலவின் பெயரைப் பரிந்துரைத்திருந்ததுடன் அமைச்சர் விஜித ஹேரத் அதனை உறுதிப்படுத்தினார். அதன்படி, ஏகமனதாக அசோக ரன்வல சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.
அசோக ரங்வல 2024 பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்ற ஆணையைப் பெற்றிருந்தார் என்பதும் அவருக்கு 109,332 வாக்குகள் கிடைக்கப்பெற்றிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.