வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவிற்கு ஆப்பிரிக்க சிங்கம், இரண்டு பழுப்பு நிறக் கரடிகள் உட்பட 70 க்கும் மேற்பட்ட விலங்குகளை ரஷ்யா பரிசாக வழங்கியுள்ளது.
மொஸ்கோவுக்கும் பியோங்யாங்கிற்கும் இடையிலான உறவின் அண்மைய முன்னேற்றகர நிகழ்வாக இது அமைந்துள்ளது.
ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தலைமையிலான ரஷ்ய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் அமைச்சர் அலெக்சாண்டர் கோஸ்லோவ், சரக்கு விமானத்தில் வட கொரிய தலைநகருக்கு விலங்குகளை கொண்டு வந்தார் என்று கோஸ்லோவின் அலுவலகம் புதன்கிழமை (20) அதன் அதிகாரப்பூர்வ டெலிகிராம் சேனலில் தெரிவித்தது.
உக்ரேனில் ரஷ்யாவுடன் இணைந்து போரிட வட கொரியா ஆயிரக்கணக்கான படையினரை அனுப்பியதை அமெரிக்காவும் தென் கொரியாவும் வெளிப்படுத்திய சில வாரங்களுக்குப் பின்னர் இந்த பரிசு வந்துள்ளது.