பாகிஸ்தானின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்களின் போராட்டம் வன்முறையாக மாறியதால், 4 துணை இராணுவப் படையினர், இரண்டு பொலிஸார் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
வன்முறையில் மேலும், 100 க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் காயமடைந்துள்ளனர்.
வன்முறையாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதால், நிலைமையைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இம்ரான் கான், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார், மேலும் அவர் மீது 150 குற்றவியல் வழக்குகள் உள்ளன.
ஆனால் அவருக்கும் அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சிக்கும் மக்களிடையே இப்போதும் ஆதரவு உள்ளது.
அவர் மீது அரசியல் காரணங்களுக்காக வழக்குகள் போடப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
இம்ரான் கானை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து மோதல் வெடித்தது.