வங்கக்கடலில் ‘ஃபெஞ்சல்’ புயல் உருவானதையொட்டி, சென்னையில் இன்று கடல் சீற்றம் அதிகளவில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடற்கரைக்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கடற்கரைச் சாலையில் காலையில் மட்டும் நடைபயிற்சி மேற்கொள்ள பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா். அப்போது, கடல் அலைகள் பல மீட்டருக்கு உயர்ந்திருந்ததாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
இதையடுத்து, பொலிஸார் அந்தப் பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனா். மேலும், தடுப்புகள் அமைத்து கடலில் குளிக்கவோ, அலைகளில் கால் நனைக்கவோ யாரையும் பொலிஸார் அனுமதிக்கவில்லை.