புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலை காரணமாக 9034 குடும்பங்களைச் சேர்ந்த 30598 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் புத்தளம், முந்தல், கற்பிட்டி, வன்னாத்தவில்லுவ, நாத்தாண்டிய, மாதம்பை, ஆராச்சிக்கட்டுவ, பல்லம, தங்கொட்டுவ, மஹாவெவ, சிலாபம், கருவலகஸ்வெவ மற்றும் வென்னப்புவ ஆகிய 13 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 176 கிராம சேவகர்கள் பிரிவுகளைச் சேர்ந்த 9034 குடும்பங்களைச் சேர்ந்த 30598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிகளவிலான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு 15 கிராம சேவகர் பிரிவுகளில் 2181 குடும்பங்களைச் சேர்ந்த 8627 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 24 கிராம சேவகர் பிரிவுகளில் 834 குடும்பங்களைச் சேர்ந்த 3064 பேரும், வன்னாத்தவில்லுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 7 கிராம சேவகர் பிரிவில் 107 குடும்பங்களைச் சேர்ந்த 339 பேரும், நாத்தாண்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 18 கிராம சேவகர் பிரிவுகளில் 270 குடும்பங்களைச் சேர்ந்த 862 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மாதம்பை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 13 கிராம சேவகர் பிரிவில் 270 குடும்பத்தைச் சேர்ந்த 776 பேரும், ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 17 கிராம சேவகர் பிரிவில் 887 குடும்பங்களைச் சேர்ந்த 2883 பேரும், வென்னப்புவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 24 கிராம சேவகர் பிரிவுகளில் 623 குடும்பங்களைச் சேர்ந்த 2386 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், தங்கொட்டுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவகர் பிரிவுகளில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 81 பேரும், பல்லம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 4 கிராம சேவகர் பிரிவுகளில் 343 குடும்பத்தைச் சேர்ந்த 1121 பேரும் , கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 11 கிராம சேவகர் பிரிவுகளில் 655 குடும்பங்களை சேர்ந்த 2315 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 11 கிராம சேவகர் பிரிவுகளில் 2212 குடும்பங்களை சேர்ந்த 5751 பேரும், கருவலகஸ்வெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 2 கிராம சேவகர் பிரிவுகளில் 3 குடும்பங்களை சேர்ந்த 7 பேரும் , மஹெவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 24 கிராம சேவகர் பிரிவுகளில் 623 குடும்பங்களை சேர்ந்த 2386 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் 19 பாதுகாப்பு நிலையத்தில் 942 குடும்பங்களைச் சேர்ந்த 3748 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவில் 3 நிலையங்களில் 41 குடும்பங்களைச் சேர்ந்த 155 பேரும், சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவில் 13 நிலையங்களில் 896 குடும்பங்களைச் சேர்ந்த 3574 பேரும், ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளர் பிரிவில் 1 நிலையத்தில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேரும், புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் 1 நிலையத்தில் 1 குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும், நாத்தாண்டிய பிரதேச செயலாளர் பிரிவில் 1 நிலையத்தில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 61 குடும்பங்களை சேர்ந்த 220 பேர் தமது உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் 46 வீடுகளும், 3 வர்த்தக நிலையங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுன.
அத்துடன், வெள்ளம் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர் எனவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.