உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்வதா இல்லையா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்வதற்காக கட்சித் தலைவர்களின் தீர்மானமிக்க கூட்டம் ஒன்று அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடலில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்து செய்யுமாறு பல அரசியல் கட்சிகள் ஏற்கனவே அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.