பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் உட்பட பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் 35 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தவிர 7 பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் 7 உதவி பொலிஸ் அத்தியட்சர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஈ.எம்.எம்.எஸ். தெஹிதெனிய நுகேகொடை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முத்துமால குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இடமாற்றம் செய்யப்பட்டுள்ளவர்களின் முழு விபரம் கீழே: