மக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல இன்று நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்
நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அத்துடன் 10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு தற்போது சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
இதன்படி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் மீதான விவாதம் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது