ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை பிரதிநிதித்துப்படுத்தி தேசியப்பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்டிருந்த ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.நளீம் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்பாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 87 ஆயிரத்து 38 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களை கைப்பற்றியிருந்தது.
இதன்படி, கட்சிக்கு தேசியப்பட்டியல் ஒன்று கிடைக்கபெற்ற நிலையில் எம்.எஸ்.நளீமை நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்க கட்சித்தலைமை தீர்மானித்திருந்தது.
இந்நிலையில் இன்று காலை ஆரம்பமாகிய சபை நடவடிக்கையின் முதல் நிகழ்வாக எம்.எஸ்.நளீம் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.