ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் திருவண்ணாமலையில் பெய்த கனமழையின் காரணமாக வ.உ.சி நகர் பகுதியில் உள்ள குடியிருப்புப் குதியில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட மண்சரிவில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த 7 பேரில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன எனவும், மீதமுள்ளோரின் உடல்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த சசம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.