மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின் பிரகாரம் டிசம்பர் மாத விலை திருத்தம் நாளை அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் தற்போது நிலவும் எரிவாயு விலையுடன் ஒப்பிட்டு இந்த வருடம் எரிவாயுவின் விலை திருத்தம் செய்யப்படவுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போது உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள நிலையில் எரிவாயுவின் விலையை ஸ்திரமான நிலையில் பேணுவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கான முன்மொழிவுகள் நிதியமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை குறித்த விலையே நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது