சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் (IBF) உலக ஹெவிவெயிட் சாம்பியனான டேனியல் டுபோயிஸ் 2025 பெப்ரவரி 22 ஆம் திகதி ரியாத்தில் முன்னாள் சாம்பியன் ஜோசப் பார்க்கரை எதிர்த்து போட்டியிடவுள்ளார்.
லண்டனைச் சேர்ந்த 27 வயதான அவர், தனது பட்டத்தை பாதுகாக்கும் நோக்குடன் உலக குத்துச்சண்டை அமைப்பின் (WBO) இடைக்கால ஹெவிவெயிட் சாம்பியனான நியூசிலாந்தின் பார்க்கரை இந்த ஆட்டத்தில் எதிர்கொள்கிறார்.
டுபோயிஸ், செப்டம்பரில் ஆண்டனி ஜோசுவாவை தோற்கடித்ததன் மூலம் IBF உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்றார்.