இராணுவச் சட்ட முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தென் கொரிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன் (Kim Yong-Hyun) புதன்கிழமை தற்கொலைக்கு முயன்றார்.
அதன்படி, தென் கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தடுப்புக் காவலில் தற்கொலை செய்து கொள்ள தனது உள்ளாடைகளை பயன்படுத்தினார் என்று அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி யூன் சுக் யோல் இராணுவச் சட்டத்தை அமல்படுத்திய பின்னர், தேசத்துரோக குற்றச்சாட்டை விசாரித்து வந்த தென் கொரிய வழக்கறிஞர்களால், முன்னாள் பாதுகாப்பு அமைச்சரவை அண்மையில் கைது செய்தனர்.
தனது பதவியை இராஜினாமா செய்த கிம் யோங்-ஹியூன், தற்காலிக இராணுவ சட்டத்தை அமல்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார் என்று குற்றம்சாட்டப்படுகிறது.
கடந்த வாரம் நாடு தழுவிய கொந்தளிப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி யூன் சுக் யோலின் குறுகிய கால இராணுவச் சட்டப் பிரகடனத்தைத் தொடர்ந்து தென் கொரியாவில் உள்ள சிறப்புப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு ஜனாதிபதி அலுவலகத்தில் சோதனை நடத்தியது.
சிறப்பு புலனாய்வுக் குழு ஜனாதிபதி அலுவலகம், தேசிய பொலிஸ் முகவர் நிலையம், சியோல் பெருநகர பொலிஸ் முகவர் நிலையம், மற்றும் தேசிய சட்டமன்ற பாதுகாப்பு சேவை என்பவற்றில் சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.