பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வெள்ளிக்கிழமை (13) காலை புதிய பிரதமரை நியமிப்பார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
“பிரதமரின் பெயரைக் குறிப்பிடும் அறிக்கை நாளை (13) காலை வெளியிடப்படும்” என்று எலிசி ஜனாதிபதி மாளிகை மக்ரோனின் போலந்து பயணத்தின் பின்ன் வியாழன் அன்று கூறியது.
நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பிரெஞ்சு எம்.பி.க்கள் மைக்கேல் பார்னியரை பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றிய பின்னர் பிரெஞ்சு அரசியல் முட்டுக்கட்டையாக உள்ளது.
பார்னியர் பதவியில் இருந்து மூன்று மாதங்களுக்குப் பின்னர் பதவி விலகினார் – நவீன பிரெஞ்சு வரலாற்றில் எந்தவொரு பிரதமரும் இல்லாத மிகக் குறுகிய பதவிக்காலம் இதுவாகும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் திடீர் தேர்தல்களை மக்ரோன் அழைத்த பின்னர் அரசாங்கத்தின் வீழ்ச்சி மக்ரோனுக்கு அழுத்தம் கொடுத்தது.
அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்ரோனை இராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.
2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்னும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை.
எவ்வாறெனினும் மக்ரோன், ஒரு தொலைக்காட்சி உரையில் தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தின் முடிவு வரை (மே 2027) பதவியிலிருந்பேன் என்று கூறியுள்ளார்.