தாய்லாந்தின் உம்பாங் நகரில் நடைபெற்ற வருடாந்திர திருவிழாவின் போது வெடிகுண்டொன்று வெடித்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலே இக்குண்டு வெடிப்பிற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் இதுதொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.