கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனையில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.
அரிசி விலைக் கட்டுப்பாடு தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த விடயம் அம்பலமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.