பசுபிக் பெருங்கடலில் உள்ள வனுவாடூ தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று(17) காலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
போர்ட் விலா பகுதியில் இருந்து மேற்கு திசையில் 30 கி.மீ. தொலைவில் நிலத்துக்கடியில் சுமார் 43 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுமார் 1 மீற்றர் (3 அடி) உயரத்துக்கும் அலைகள் எழும்பியதால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.