மார்கழி மாதம் என்பது மகாவிஷ்ணுவிற்குரிய மாதமாக திகழ்கிறது.
அப்படிப்பட்ட மாதத்தில் மகாவிஷ்ணுவை நினைத்துக் கொண்டு நாம் செய்யக்கூடிய எந்த செயல்களாக இருந்தாலும் அந்த செயல்களால் நமக்கு நன்மைகள் உண்டாகும் என்றே கூறப்படுகிறது.
நன்மைகள் பெருக வேண்டும் என்று நினைப்பவர்களும் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் விலக வேண்டும் என்று நினைப்பவர்களும் மார்கழி மாதத்தில் பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும்.
அப்படி நம்முடைய வாழ்க்கையை புரட்டிப்போடும் அளவிற்கு கஷ்டங்கள் ஏற்படுத்துவதற்கு காரணமாக திகழக்கூடிய கடன் பிரச்சினை தீர்வதற்கு என்ன வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாக கடன் தொடர்பான பிரச்சனைகள் தீர வேண்டும் என்றால் அதற்கு செவ்வாய் பகவானின் அருள் என்பது வேண்டும்.
அதனால் தான் செவ்வாய் பகவானுக்குரிய அதிபதியான முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமை அன்று வழிபாடு செய்வதன் மூலம் கடன் பிரச்சினை தீரும் என்று கூறுவார்கள்.
அதே வகையில் பெருமாளுக்கு உரிய மார்கழி மாதத்தில் கடன் பிரச்சினை தீருவதற்குரிய செவ்வாய்க்கிழமை அன்று பெருமாளை வழிபாடு செய்யும் முறையை பார்க்கலாம்.
நம்முடைய முன் ஜென்ம கர்ம வினைகளின் அடிப்படையில் தான் நமக்கு நோய்களோ கடன்களோ ஏற்படுகிறது.
அதன் மூலம் பாதிப்புகளும் உண்டாகிறது. அதனால் நம்முடைய கர்ம வினைகளை நாம் குறைக்க வேண்டும்.
அப்படி நாம் கர்ம வினைகளை குறைக்க வேண்டும் என்றால் நம்மால் இயன்ற அளவிற்கு தான தர்மங்களை செய்ய வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.
அதனால் தான் பலரும் தங்களால் இயன்ற அளவிற்கு பிறருக்கு தானம் செய்ய வேண்டும் தர்மம் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள்.
அப்படி நம்முடைய கடன் பிரச்சினை தீர்வதற்கு மார்கழி மாதத்தில் செவ்வாய்க்கிழமை அன்று செய்ய வேண்டிய தானத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஒரு பொரியை வாங்கி அருகிலுள்ள ஆலயத்திற்கு எடுத்துச்சென்று அங்கு இருக்கக்கூடிய குளங்கள் அல்லது நீர்நிலைகளில் இருக்கும் மீன்களுக்கு உணவாக போட வேண்டும்.
இதை செவ்வாய்க்கிழமை அன்று செய்ய வேண்டும்.
மீன் என்பது பெருமாளுக்குரிய மச்ச அவதாரத்தை குறிக்கிறது. செவ்வாய்க்கிழமை என்பது கடன் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய நாளாக திகழ்கிறது.
அதனால் செவ்வாய்க்கிழமை அன்று மீனுக்கு நாம் பொரியை தானமாக தருவதன் மூலம் மகாவிஷ்ணுவின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நம்முடைய கர்ம வினைகள் தீரும்.
அதன் மூலம் கடனை தீர்வதற்காக நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும் என்று கூறப்படுகிறது.