கொட்டகலை, டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் 10 வீடுகள் கொண்ட 6ம் இலக்க தொடர் லயக்குடியிருப்பில் இன்று முற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் குறித்த நான்கு வீடுகளிலும் இருந்த 22 பேர் தற்காலிகமாக உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தீப்பரவலின் போது வீட்டிலிருந்தவர்கள் கூச்சலிட்டதாகவும், அதன் பிறகு அயலவர்கள் ஓடி வந்து ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த வீட்டில் இருந்த பெருமளவிலான உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என்பன தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகத்தின் ஊடாக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.