ஹொலிவுட் நடிகர் டொ குரூஸுக்கு (Tom Cruise) அமெரிக்க கடற்படையின் உயரிய சிவிலியன் விருது வழங்கப்பட்டது.
“Top Gun” திரைப்படத்தில் அவரது நடிப்புக்கு நன்றி செலுத்துவதற்காகவும், இதன் மூலமாக அமெரிக்க கடற்படை மற்றும் இராணுவத்துக்கு அவர் மறைமுகமாக செய்த பங்களிப்புக்காகவும் இந்த விருது வழங்கப்பட்டது.
1986 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான டாப் கன் திரைப்படத்தில் குரூஸின் முக்கிய பாத்திரம் அவரை பிரபல அந்தஸ்துக்கு கொண்டு வந்தது.
மேலும் படத்தின் சாதனை முறியடிக்கும் வெற்றி அமெரிக்க இராணுவம் மற்றும் கடற்படையில் அதிகளவிலான இளைஞர்கள் இணையவும் வழிவகுத்தது.
சர்ரே, செர்ட்சேயில் உள்ள லாங்கிராஸ் ஃபிலிம் ஸ்டுடியோவில் செவ்வாய்கிழமை நடந்த விழாவில் குரூஸுக்கு சிறப்புமிக்க பொது சேவை விருது வழங்கப்பட்டது.
62 வயதான ஹொலிவுட் நட்சத்திரம் மதிப்பு மிக்க இந்த விருதினை வழங்கியமைக்காக அமெரிக்க கடற்படைக்கு நன்றி தெரிவித்தார்.