மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் டேரன் சமி (Darren Sammy) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் தனது பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனர் மைல்ஸ் பாஸ்கோம்ப் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
40 வயதான டேரன் சமி, கடந்த 2023 ஆம் ஆண்டு மேற்கிந்திய அணியின் ஒயிட்-பால் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார்.
முன்னதாக 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கிண்ண தொடரில் டேரன் சமி தலைமையிலான மேற்கிந்திய அணி T20 உலகக் கிண்ணத்தை வென்று சரித்திரம் படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.