அரிசி இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதையடுத்து, இன்று (18) பிற்பகல் 3:30 மணி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு 16,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 6,000 மெற்றிக் தொன் பச்சை அரிசியும், 10,000 மெற்றிக் தொன் நாட்டரிசியும் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம், சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 04ஆம் திகதி முதல் அரிசி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்கியதன் பின்னர் 16,000 மெற்றிக் தொன் அரிசி நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.