ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்டப்பகுதியிலிருந்து சுமார் 10 வயதுடைய நன்கு வளர்ந்த சிறுத்தை ஒன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் மீட்கப்பட்ட குறித்த சிறுத்தையின் உடலில் இருந்து தலை, மற்றும் நான்கு கால்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த சிறுத்தையின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக ரன்தெனிகல வனவிலங்கு கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.