ஸ்ரீலங்கா டி10 லீக் தொடரின் முதலாவது க்வாலிபயர் போட்டி இன்று இடம்பெற்றது. இதில் ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ் அணியை வீழ்த்தி முதல் அணியாக இருதி போட்டிக்குள் நுழைந்தது ஜவ்னா டைட்டன்ஸ் அணி.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஹம்பாந்தோட்டை அணி ஜவ்னா அணியை துடுப்பாட அழைத்தது . இதன்படி முதலில் துடுபபெடுத்தாடிய ஜவ்னா டைட்டன்ஸ் அணி 10 ஓவர்களில் 4 வி்க்கெடடுகளை இழந்து 124 ஓட்டங்களை பெற்றது.
அவ்வணி சார்டபில் குசல் மெண்டிஸ் 47 ஓட்டங்களை பெற்று கொடுத்தார். 125 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்படுத்தாடிய ஹம்பாந்தோட்டை அணி 9.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 85 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இதனால் 39 ஓட்டங்களினால் ஜவ்னா டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்று , முதல் அணியாக ஸ்ரீலங்கா டி10 தொடரின் இறுதி போட்டிக்குள் நுழைந்தது.