ஐசிசி இறுதியாக 2025 சாம்பியன்ஸ் டிராபி முட்டுக்கட்டையில் ஒரு திருப்புமுனையை எட்டியுள்ளது.
அதன்படி, ஒரு கலப்பின (Hybrid) முறை அடிப்படையில் எட்டு அணிகள் பங்கெடுக்கும் போட்டியில் இந்தியாவின் ஆட்டங்கள் நடுநிலையான இடத்தில் நடைபெறும்.
பதிலுக்கு, இந்தியா நடத்தும் ஏனைய ஐசிசி நிகழ்வுகளில் பாகிஸ்தானின் போட்டிகளும் நடுநிலையான இடத்தில் நடைபெறும்.
அதாவது உடன்பாட்டுக்க அமைய, 2024-2027 ஐசிசி ஏற்பாடின் கீழ் பாகிஸ்தான் நடத்தும் போட்டிகளில் இந்தியா சம்பந்தப்பட்ட அனைத்து ஆட்டங்களும் நடுநிலை மைதானத்தில் விளையாடப்படும்.
மேலும் இந்தியா நடத்தும் போட்டிகளில் பாகிஸ்தான் பங்கேற்கும் அனைத்து ஆட்டங்களும் நடுநிலை மைதானத்தில் விளையாடப்படும்.
இரண்டு நிகழ்வுகளிலும், அனைத்து போட்டிகளும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி போன்ற நாக் அவுட் விளையாட்டுகளை உள்ளடக்கியதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபியுடன் தொடங்குகிறது.
மேலும் இது 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணம் மற்றும் 2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் ஆண்கள் டி20 உலகக் கிண்ணத்துக்கும் பொருந்தும்.
இதில், இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடும் எந்த ஆட்டமும் இலங்கையில் நடைபெறும்.
அதேநேரம், ஒப்பந்தம் 2028 மகளிர் டி20 உலகக் கிண்ணத்துக்கும் பொருந்தும்.
நடுநிலையான இடத்தைத் தேர்ந்தெடுப்பது போட்டி நடத்துபவர்களால் தீர்மானிக்கப்படும். எனினும் அதற்கு ஐசிசியின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.
சாம்பியன்ஸ் டிராபியைப் பொறுத்தவரை, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 24 மணி நேரத்திற்குள் நடுநிலையான இடத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்மொழிய வேண்டும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முன்னணியில் இருந்த போதிலும் இலங்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிகழ்விற்கான முழு ஹோஸ்டிங் உரிமைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தக்க வைத்துக் கொள்ளும்.