டெல்லியில் அமைந்துள்ள பல பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டமை தொடர்பான அண்மைய விசாரணையில் அதிர்ச்சியூட்டம் தகவல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவின் தகவலின்படி, ரோகினி மாவட்டத்தில் உள்ள குறைந்தபட்சம் இரு பாடசாலைகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்கள், அதே பள்ளியில் கல்வி கற்கும் இரு மாணவர்களால் மின்னஞ்சல் மூலமாக விடுக்கப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
மாணவர்கள் பரீட்சைக்கு ஆயர்த்தம் இல்லாத காரணத்தினால், பரீட்சையை தாமதப்படுத்துமாறு கோரி இந்த மிரட்டலை விடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவருக்கும் அறிவுரை வழங்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக டெல்லி பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (22) மேலும் தெரிவித்துள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களால் பாதிக்கப்பட்ட குறைந்தது மூன்று பாடசாலைகள் தங்கள் சொந்த மாணவர்களின் எச்சரிக்கையை எதிர்கொண்டதாக டெல்லி காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
கடந்த 11 நாட்களாக போலியான வெடிகுண்டு மிரட்டல்களால் டெல்லியில் 100க்கும் மேற்பட்ட பாடசாலைகள் குழப்பத்தில் உள்ளன.
விபிஎன் (விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்) மூலம் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர், இதனால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது அவர்களுக்கு கடினமாக உள்ளது.
இந்த ஆண்டு மே மாதம் முதல், டெல்லியில் உள்ள பாடசாலைகள் மட்டுமல்லாது மருத்துவமனைகள், விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களை குறிவைத்து 50க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் மூலமாக கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.