2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான மொத்த ஏற்றுமதிகள் (பொருட்கள் மற்றும் சேவைகள்) 1,269.33 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 0.04% குறைந்த அதிகரிப்பை பிரதிபலிக்கிறது.
இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகளின்படி,
2024 நவம்பரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் 943.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இது நவம்பர் 2023 உடன் ஒப்பிடும்போது 5.6% சரிவை பிரதிபலிக்கிறது.
இறப்பர் அடிப்படையிலான பொருட்கள், மின்னணுப் பொருட்கள், உணவு-பானங்கள் மற்றும் கடல் உணவுகள் ஆகியவற்றின் ஏற்றுமதியின் வருவாய் குறைவதே இதற்கு முதன்மையான காரணமாகும்.
எவ்வாறாயினும், 2024 நவம்பர் மாதத்திற்கான சேவைகள் ஏற்றுமதிகள் 326.23 மில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது 2023 ஆம் ஆண்டின் தொடர்புடைய காலத்தை விட 20.89% அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது.