அண்மைக்கால பாதகமான காலநிலையினால் பயிர்கள் அழிவடைந்த நெல் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 100,000 ரூபா வரை இழப்பீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2025 பயிர் காப்புறுதி ஒதுக்கீட்டின் கீழ் சோளம், மிளகாய், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் சோயா விவசாயிகளுக்கும் இதேபோன்ற இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மோசமான காலநிலையால் அழிக்கப்பட்ட அல்லது சேதமடைந்த தோட்டங்கள் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்கள் பற்றிய விவரத்தையும் அமைச்சர் வழங்கினார்.
2024 டிசம்பர் 2 வரையான விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் தரவுகளின்படி:
• நெல் வயல்கள்: 91,300 ஏக்கர்கள் முற்றாக அழிந்தது; 86,225 ஏக்கர் பகுதி சேதமடைந்துள்ளன.
• நீர்ப்பாசனத் திட்டங்கள்: 173 சிறு திட்டங்கள் முற்றிலும் அழிந்தன1,148 பகுதி சேதமடைந்துள்ளன
• காய்கறி தோட்டங்கள்: நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 750 ஏக்கர் நாசமாகின.