தேசிய ஆண்கள் டெஸ்ட் அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸின் காயம் குறித்த புதுப்பிப்பை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) திங்களன்று வழங்கியது.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இடது தொடை தசைக் காயத்தால் நட்சத்திர சகலதுறை வீரர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து குறைந்தது மூன்று மாதங்களுக்கு விலக்கப்பட்டுள்ளார் என்று அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
இதனால் அவர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடக்கவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் அதற்கு முந்தைய இந்திய வெள்ளைப் பந்து சுற்றுப்பயணத்தை தவறவிடுவார்.
அதேநேரம், ஸ்டோக்ஸ் எதிர்வரும் ஜனவரி மாதம் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரிய அறிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ஹாமில்டனில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது பந்துவீசும்போது ஸ்டோக்ஸ் காயம் அடைந்தார்.
அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்டோக்ஸ் துடுப்பாட்டம் செய்யவில்லை.
இறுதியாக இங்கிலாந்து அந்த ஆட்டத்தில் 423 ஓட்டங்களினால் படுதோல்வி அடைந்தது.