மீண்டும் தலைதூக்கும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
உலகத்தை ஒடுக்குவதற்கு பாதுகாப்பு தரப்பினர் திட்டமிட்ட வகையில் நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றனர்.
அரசாங்கம் என்ற வகையில், பாதாள உலகத்தையும் போதைப்பொருள் கடத்தலையும் அடக்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.