ஸ்பெயினுக்கும் அல்ஜீரியாவுக்கும் இடையே மத்தியதரைக் கடலில் உர்சா மேஜர் (Ursa Major) என்ற ரஷ்யக் கப்பல் மூழ்கியுள்ளதாக மொஸ்கோவின் வெளிவிவகார அமைச்சு செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலின் என்ஜின் அறையில் ஏற்பட்ட வெடி விபத்தை அடுத்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதையடுத்து, கப்பலில் பயணித்த 14 பணியாளர்கள் மீட்கப்பட்டு ஸ்பெயினின் கார்டஜீனா துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும், நீரில் மூழ்கிய இருவர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ரஷ்ய செய்தி நிறுவனமான இன்டர்ஃபாக்ஸ் படி, உர்சா மேஜர் கப்பல் கடந்த 12 நாட்களுக்கு முன்பு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள துறைமுகத்தை விட்டு தனது பயணத்தை ஆரம்பித்தது.
380 தொன் எடையுள்ள துறைமுகத்திற்கான இரண்டு கிரேன்களை சுமந்து கொண்டு ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள விளாடிவோஸ்டோக்கிற்கு செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கப்பலின் உரிமையாளர் கூறினார்.
எனினும், இலக்கை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.