கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
கூட்டத்தில் அனுமதியின்றி நுழைந்த நபரொருவருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் இடையில் உண்டான வாக்குவதாம் காரணமாக அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அமைச்சர் சந்திரசேகரன் தலையீடு செய்து கூட்டத்தை அமைதி நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன், வடமாகாண ஆளுநர் வேதநாயகன் இணைத் தலைமையில் இன்று காலை ஆரம்பமான குறித்த கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், இராமநாதன் அர்ச்சுனா, ரஜீவன், இளங்குமரன், பவானந்தராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன், மற்றும் திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.