2025 புத்தாண்டை முதலில் மத்திய பசிபிக் பெருங்கடலில் கிரிபாட்டி குடியரசின் அங்கமான கிரிட்டிமாட்டி [Kiritimati] தீவு இலங்கை நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டை வரவேற்றது. தொடர்ந்து கிரிபாட்டி, டோங்கா மற்றும் சமோவா ஆகிய நாடுகளில் 2025 ஆம் ஆண்டு பிறந்தது.
இந்நிலையில் அதைத்தொடர்ந்து 52 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்து நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் 2025 பிறந்துள்ளது.
இலங்கை நேரப்படி மாலை 4.30 மணியளவில் அங்கு புத்தாண்டு பிறந்தது. நகரின் மையப்பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு புத்தாண்டை வரவேற்றனர்.
தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் விருந்துகள் என அங்கு கொண்டாட்டங்கள் கலை கட்டியுள்ளது. நியேசிலாந்து தலைநகர் சிட்னியிலும் புத்தாண்டு பிறந்து, மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைதொடர்ந்து டோக்கியோ, ஜப்பானிலும் புத்தாண்டு பிறந்தது.
அவுஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்நிலையில், அவுஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னி நகரில், நள்ளிரவு 12:00 மணி (இலங்கை நேரப்படி 06:30) புத்தாண்டு வரவேற்கப்பட்டது. சிட்னி நகரில் உள்ள உலகப்புகழ்பெற்ற துறைமுக பாலத்தில், ஒபேரா ஹவுஸ் அருகில், மக்களின் கண்களை கவரும் வகையில் பிரம்மாண்ட வான வேடிக்கை நடைபெற்றது.