பதுளை – கொழும்பு பிரதான வீதியில் ஹப்புத்தளை – விஹாரகல பகுதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன், குறித்த வேனில் பயணித்த 13 பேர் காயமடைந்த நிலையில் தியதலாவை மற்றும் பங்கெட்டிய ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர் .
ப்ரேக் (தடுப்பு) தொகுதி தொழிற்படாமையினால், குறித்த வேன் மண்மேடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர்கள் சுற்றுலா ஒன்றுக்கு வந்து வீடு திரும்பும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸ்சார் மேற்கொண்டு வருகின்றனர்.