இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு மாணிக்கம். இந்த படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத் திரைப்படம் கடந்த 27 ஆம் திகதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகியுள்ள ‘திரு.மாணிக்கம்’ படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“ஒரு நல்ல படத்துக்கு அடையாளம் படம் பார்த்த பிறகு அதில் வரும் காட்சிகள், கதாபாத்திரங்கள் மூன்று நான்கு நாட்களுக்காவது நினைவில் வந்துகொண்டே இருக்கணும் அந்த படத்தில் வரும் எதாவது ஓர் நல்ல விஷயம், நம் வாழ்க்கையில் நாமும் கடைபிடிக்கணும் என்ற எண்ணம் உருவாகணும்.
அந்த மாதிரி சமீபத்தில் நான் பார்த்த திரு.மாணிக்கம் என்கிற படம் ஓர் அற்புதமான படைப்பு. உண்மை சம்பவத்தைவைத்து திரைக்கதை, வசனத்தை எழுதி சிறப்பாக இயக்கியிருக்கும் நந்தா பெரியசாமி அவர்கள் தான் ஓர் அற்புதமான இயக்குநர் என்பதை நிருபித்திருக்கிறார் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.