கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் இலங்கைக்கான ரஷ்ய நாட்டு தூதுவர். Levan S. Dzhagaryan ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று திருகோணமலை ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது
இதன்போது ஆளுநர் ரஷ்ய பட்டதாரி என்பதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்துடனும் இலங்கையுடனும் நெருக்கமாகச் செயற்பட்டு நாட்டின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும் ரஷ்யத் தூதுவர் தெரிவித்தார்.
மேலும் இலங்கைக்கான மனிதாபிமான உதவியின் கீழ் ரஷ்ய நாட்டில் இருந்து பெறப்பட்ட உரத்திற்கு தாம் மிகவும் நன்றிக்கடன்படுவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்