இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் கடுமையான வானிலை நிலவரம் பரவியுள்ளது. பனி மற்றும் மழை பல பகுதிகளை பாதிக்கின்றன, குறிப்பாக தெற்கு இங்கிலாந்தில், இதனால் வெள்ள எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் 200க்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் எட்டியுள்ளன.
இந் நிலையில் பல்வேறு பயண வழிகளில் உட்பட விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன, மேலும் போக்குவரத்து தாமதங்கள் ஏற்படுகின்றன. மான்செஸ்டர் மற்றும் லிவர்பூல் விமான நிலையங்கள் அவற்றின் ஓடுபாதைகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஆனால் தற்போது அவை மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. எனினும், விமானப்பயணங்களின் தாமதங்கள் தொடர்ந்தும் பெரும்பாலான பயணங்களை பாதிக்கின்றன.
மேலும் வானிலை ஆராய்ச்சி நிலையம் கும்ப்ரியா, லங்காஷயர் மற்றும் லேக் மாவட்டங்களில் 15 செமீ வரை பனி குவியக் கூடும் என எச்சரித்துள்ளது. இதன் படி, வடக்கு இங்கிலாந்தின் அம்பர் வானிலை எச்சரிக்கைகள் நீடிக்கப்பட்டுள்ளன. UK இல் பரவலான பனியும் உறைபனியும் எதிர்பார்க்கப்படுகிறது, வடக்கு இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தில் கடுமையான பனி தொடரும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இந்த பனிப்பொழிவில், பீக் மாவட்டம் மற்றும் பென்னைன்ஸின் உயர் பகுதிகளில் 40 செமீ வரை பனி பெய்யக்கூடும்.
எனவே UK சுகாதார பாதுகாப்பு நிறுவனம், இங்கிலாந்து முழுவதும் கடுமையான குளிரில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் பயண இடையூறுகள் மற்றும் மின்வெட்டு நீடிக்க வாய்ப்பு உள்ளது. இதனுடன், பொதுமக்கள் அவசரகால சேவைகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.