அமெரிக்காவை தாக்கிய பெரும் குளிர்கால புயலால் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
பனிப் புயலானது நாட்டின் வெகுஜன பாடசாலைகள் மூடல், பயணக் குழுப்பம் மற்றும் மின் வெட்டுக்கும் வழிவகுத்தது.
அதேநேரம் மேரிலாந்து, வர்ஜீனியா, மேற்கு வர்ஜீனியா, கன்சாஸ், மிசோரி, கென்டக்கி மற்றும் ஆர்கன்சாஸ் ஆகிய ஏழு அமெரிக்க மாநிலங்களில் அவசரநிலைகளை அறிவிக்கப்பட்டுள்ளன.
தீவிர வானிலை காரணமாக 2,300 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன், 9,000 விமானங்கள் தாமதமாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Poweroutage.us. தகவலின்படி, புயலின் பாதையில் உள்ள மாநிலங்களில் திங்கள்கிழமை (06) இரவு 200,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே செவ்வாயன்று (07) அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளில் பனி மற்றும் பனிப்பொழிவு தொடரும் என்று நாட்டின் தேசிய வானிலை சேவை (NWS) கணித்துள்ளது.