நியூசிலாந்து சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த இலங்கை அணி இன்று தாயகம் திரும்பியதுள்ளது
இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜயசூரிய, போட்டித் தொடரில் தோல்வியடைந்தமை குறித்து தாம் வருந்துவதாக தெரிவித்தார்.
மேலும், போட்டித்தொடரின் போது இடம்பெற்ற தவறுகள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழக்கூடாது என்றும், தவறுகளை சரிசெய்து எதிர்கால போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்றும் சனத் ஜயசூரிய தெரிவித்தார்