கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பரந்தன் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த ஓட்டுனர் பயிற்சி பாடசாலையின் முச்சக்கர வண்டியினை, அதே பகுதியில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்