தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும் அரசிடம் கோரிக்கை வைத்து, வடக்கு கிழக்கு தழுவிய ரீரியில் கையெழுத்துக்களைச் சேகரிக்கும் போரட்டமானதன் தொடர்ச்சியாக இன்று திருகோணமலையில் கையல்யெழுத்து சேகரிக்கப்பட்டுள்ளது
திருகோணமலை சிவன் கோவிலடியில் குறித்த நிகழ்வானது முன்னெடுக்கப்பட்டிருந்தது
இதேவேளை வடகிழக்கு ரீதியில் கையெழுத்துக்களை சேகரித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடமும், சட்டமா அதிபரிடமும் கையளிக்கவுள்ளதாக போராளிகள் நலன் புரிச்சங்கத்தினர் இதன்போது தெரிவித்திருந்தனர்