ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த 2 போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெப்ரவரி 12 ஆம் திகதியும், இரண்டாவது ஒருநாள் போட்டி பிப்ரவரி 14 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.
இதேவேளை இரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி காலியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.