அமெரிக்க ஜானாதிபதியாக பதவியேற்கவுள்ள ட்ரம்ப் உடன் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீடா அம்பானி சந்திப்பு கவனம் பெற்று வருகின்றது
அமெரிக்க ஜானாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது ஜானாதிபதியாக வாஷிங்டனில் இன்று பதவியேற்கவுள்ளார்
அமெரிக்க ஜானாதிபதி பதவியேற்ப விழாவுக்கு வெளிநாட்டு தலைவர்களை அழைப்பது வழக்கம் இல்லை என்றாலும் இந்த முறை ட்ரம்ப் வெளிநாட்டு தலைவர்கள் சிலருக்கு, அழைப்பு விடுத்துள்ளார்.
அதேபோல் தொழிலதிபர்கள் பலருக்கும் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அந்த வகையில் முகேஷ் அம்பானி, நீடா அம்பானிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
மேலும் அமெரிக்க ஜானாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்கும் ட்ரம்ப்புக்கு வாழ்த்துகளை அவர்கள் தெரிவித்துள்ளதுடன் அவரது ஆட்சிக் காலத்தில் இந்தியா – அமெரிக்கா கூட்டுறவு இருநாடுகளுக்கும், வளர்ச்சியைத் தரும் சாத்தியங்களைக் கொண்டிருப்பதாகக் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்