எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து செயல்படுவது தொடர்பான முதல் கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது.
இரு கட்சிகளின் குழு உறுப்பினர்களுக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
மேலும் இரு தரப்பினரின் முன்மொழிவுகளையும் பரிசீலித்த பிறகு எதிர்காலத் தலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்