கொலம்பியாவில் அமைதியின்மை சீர்குலைந்த நிலையில், வெடித்த புதிய வன்முறையால் கடந்த நான்கு நாட்களில் பொதுமக்கள் உட்பட 80 க்கும் மேற்பட்டவர்களைக் உயிரிழந்துள்ளனர்.
மேலும், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (19) தெரிவித்தனர்.
தேசிய விடுதலை இராணுவம் (ELN) மற்றும் கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப் படைகளின் (Farc) அதிருப்தி பிரிவுகளுக்கு இடையேயான வன்முறை வெனிசுலாவின் எல்லையில் உள்ள பகுதியில் வியாழன் முதல் வேகமாக அதிகரித்து.
இதனால், குறைந்தது 5,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.
தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் குடும்பங்களுக்கு பாடசாலை கட்டிடங்ள் அவசரகால தங்குமிடங்களாக மாற்றப்பட்டுள்ளதால் கல்வி நடவடிக்கைகள் காலவரையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இப்பகுதி அவசர மனிதாபிமான உதவியைக் கோரியுள்ளது என்று நோர்டே டி சாண்டாண்டர் பிராந்தியத்தின் ஆளுநர் வில்லியம் வில்லமிசார் கூறினார்.
கொலம்பியாவின் ஒம்புட்ஸ்மேன் அலுவலகத்தின்படி, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காயமடைந்துள்ளனர் மற்றும் 10 பெண்கள் உட்பட 20 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
திபு நகராட்சியில் குறைந்தது 3,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று உள்ளூர் மேயர் ரிச்சார் கிளாரோ தெரிவித்தார்.